உலக நாடுகளில் கொரோனா பரவலை அடுத்து வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர், ஆஸ்திரேலியா நீக்கியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.
ஆஸ்திரேலிய அரசின் பயணத்தடை நீக்கத்தினால் 160,000 மாணவர்கள் உட்பட 235,000 வெளிநாட்டவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 1ஆம் திகதி முதல் பயணத்தடை நீக்கப்படுவதாக இருந்த நிலையில், ஓமிக்ரான் பரவல் காரணமாக இரண்டு வார காலம் தாமதப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.