பெருகி வரும் ஆற்றைப் பார்வையிட குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் கிளந்தான் போலீஸ் எச்சரிக்கை

கோத்தா பாரு, டிசம்பர் 18 :

நேற்று முன்தினம் பெய்த கனமழையால் ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை பார்வையிடுவதற்காக குழந்தைகளை அழைத்து வரவேண்டாம் என, பெற்றோர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மாநில காவல்துறை தலைவர் டத்தோ ஷாஃபியன் மாமட் கூறுகையில், ஆற்றில் உயரும் நீரினை பார்க்க தங்கள் குழந்தைகளை குறிப்பாக இளம் குழந்தைகளை அழைத்து வருவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றார்.

“இன்று காலை முதல், மாநிலத்தில் உள்ள பல ஆறுகள் சிறிது சிறிதாக உயர்ந்துள்ளன, மேலும் சில ஆறுகள் அவற்றின் எச்சரிக்கை மற்றும் அபாயக் குறிகளை மீறியுள்ளன.

“இந்த சூழ்நிலை சில நபர்களுக்கு ஒரு அசாதாரண காட்சியாக இருக்கலாம், எனவே, அவர்கள் தங்கள் குழந்தைகளை பெருக்கெடுத்து ஓடும் ஆற்றைப் பார்க்க அழைத்துச் செல்ல தயாராக உள்ளனர்,” என்று அவர் கூறினார்.

கோத்தா பாருவில் உள்ள Sultan’s Pier, பெருகிவரும் ஆற்றை பார்க்க மக்கள் விரும்பும் இடங்களில் ஒன்றாக உள்ளது என்றும் இன்று மாலை அப்பகுதிக்கு 20 பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் வருகை தந்தனர் என்றும் ஷஃபியன் கூறினார்.

“என்னை கவலையடையச் செய்வது என்னவென்றால், குழந்தைகள் ஆற்றை பார்த்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு ஏதேனும் தேவையற்ற அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும்,” என்று அவர் மேலும் கூறினார்.

அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க, உள்ளூர் சபைகளைச் சேர்ந்த காவல்துறையினரும் ஊழியர்களும் அவ்வப்போது அப்பகுதியை உன்னிப்பாகக் கண்காணிக்கும்படி கூறப்பட்டுள்ளதாக ஷாஃபியன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here