தடுப்புக் காவலில் இருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட போலீஸ் அதிகாரி – தொடங்கியது விசாரணை

செர்டாங் காவல்நிலையத்தில் நேற்று அதிகாலை போலீஸ் அதிகாரி ஒருவர் பெண் கைதி ஒருவரிடம்  oral sex செய்ய வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. 36 வயதான பெண்,   குற்றப்பிரிவைச் சேர்ந்த மாவட்ட போலீஸ்காரர்,  ஒரு அறையில் தனியாக இருந்தபோது இந்த செயலைச் செய்ய சொன்னதாக புகார் அளித்துள்ளார்.

அந்த பெண் தனது போலீஸ் புகாரில்,அதிகாரி தன்னை அறைக்கு அழைத்துச் சென்று, கைவிலங்குகளை அவிழ்த்து, செயலைச் செய்யும்படி உத்தரவிட்டதாக அந்தப் பெண் கூறினார். சம்பவத்திற்குப் பிறகு தான் மீண்டும் லாக்-அப்பிற்கு அனுப்பப்பட்டதாகவும், அதைப் பற்றி பேச வேண்டாம் என்று எச்சரித்ததாகவும் அவர் கூறினார்.

அறையில் கேமராக்கள் எதுவும் இல்லை என்றும், அன்றைய தினம் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் அர்ஜுனைடி முகமது தெரிவித்தார்.

போலீஸ் அதிகாரி பெண்ணை அறைக்கு அழைத்துச் சென்றாரா என்று கேட்டதற்கு, விசாரணைகள் நடந்து வருவதாக அவர் கூறினார். அப்பெண்ணும் அவரது கணவரும் கொள்ளைச் சம்பவமொன்றில் சந்தேகநபர்கள் எனவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here