கோலாலம்பூர், டிசம்பர் 21 :
பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் பேராக் (கெரியான், லாரூட், மாடாங் மற்றும் செலாமா மாவட்டங்கள்) ஒரு நாள் (டிசம்பர் 21) தொடர் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
வடக்கு சுமத்ரா கடற்பகுதியில் கணிக்கப்பட்டுள்ள வெப்பமண்டல காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீபகற்பத்தின் வடக்கே, கிழக்கை நோக்கி நகர்ந்து வருவதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் இயக்குநர் ஜெனரல் முஹமட் ஹெல்மி அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
“இது தீபகற்பத்தின் வட மாநிலங்களில் தொடர் மழை மற்றும் பலத்த காற்றை ஏற்படுத்தும். இது அந்த மாநிலங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தக்கூடும்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.