கோத்தா பாரு, டிசம்பர் 23 :
இன்று வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 361 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, எனவே திறந்திருக்கும் நிவாரண மையங்களில் கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ள கிராமவாசிகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஜைனி ஹுசின் கூறினார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டதில் இருந்து, கிளந்தானில் உள்ள அனைத்து நிவாரண மையங்களுக்கும் சுகாதார குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கிராம மக்கள் மற்றும் நிவாரண மையங்களில் பணியில் இருப்பவர்கள் ஆகியோருக்கு கோவிட்-19 பரிசோதனைகளை நடத்த வெள்ள நிவாரண மையங்களில் எங்கள் சுகாதார குழுக்களை நாங்கள் பணியில் அமர்த்தியுள்ளோம்.
“சுகாதார குழுக்கள் அங்கு நிறுத்தப்படும் அல்லது நடமாடும் சேவையில் செயல்படும்.
மேலும் கோவிட்-19 பரிசோதனை வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சகம் நாளை வெளியிடவுள்ளது.
“இன்றைய நிலவரப்படி, சுகாதார குழுக்கள் இன்னும் திறக்கப்பட்டுள்ள நிவாரண மையங்களில் இச்சேவைகளை வழங்குகின்றன, நிவாரண மையங்களில் கோவிட்-19 பரவுவதற்கு எதிரான முன்னெச்சரிக்கையாக இதுபோன்ற பரிசோதனைகள் முக்கியம் என்று டாக்டர் ஜைனி கூறினார்.
SK Tok Deh நிவாரண மையங்களில் நடந்த சோதனைகளில் கிராம மக்கள் சேவைகளுக்காக காலை 10 மணி முதலே வரிசையில் நிற்கத் தொடங்கினர். அங்கு தெண்டோங் கிளினிக்கிலிருந்து மொத்தம் ஒன்பது சுகாதார அதிகாரிகள் மையத்தில் பணியில் இருந்தனர்.
மேலும் தீபகற்பத்தில் உள்ள ஏழு மாநிலங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மொத்தம் 65,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




















