ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மலாக்காவில் உள்ள ஏழு பண்ணைகளில் கண்டறியப்பட்டுள்ளது

மலாக்கா, டிசம்பர் 24 :

மஸ்ஜிட் தானாவில் உள்ள பாயா மெங்குவாங்கில் உள்ள ஏழு பன்றிப் பண்ணைகளில், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) பரவுவதை மலேசிய கால்நடை மருத்துவ சேவைகள் துறை (JPV) இன்று உறுதிப்படுத்தியது.

சம்பந்தப்பட்ட பன்றி வளர்ப்பாளர்களின் அறிக்கை மற்றும் டிசம்பர் 20, 22, 23 ஆகிய தேதிகளில் சிப்பாங் கால்நடை ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்ட மாதிரிகள் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மலேசிய கால்நடை மருத்துவ சேவைகள் துறை நடத்திய விசாரணையின் காரணமாக இந்த நோய் கண்டறியப்பட்டது என்று ஜேபிவி இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் நோர்லிசன் முகமட் நூர் கூறினார்.

எனவே மலேசிய கால்நடை மருத்துவ சேவைகள் துறை, ASF நோயின் பரவலைக் கட்டுப்படுத்தவும் அதை இல்லாது ஒழிக்கவும் ஆரம்ப மற்றும் செயலூக்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

முதற்கட்டமாக பாயா மெங்குவாங் பகுதியில் உள்ள பன்றிப் பண்ணைகளில் தனிமைப்படுத்த உத்தரவு அறிவிப்பை வெளியிட்டதுடன் கால்நடைகள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெளியே செல்லவோ அல்லது உள் நுழையவோ அனுமதிக்கப்படவில்லை.

“விலங்குகள் சட்டம் 1953 (திருத்தம் 2013) பிரிவு 19ன் கீழ் பாதிக்கப்பட்ட பண்ணைகளில் உள்ள அனைத்து பன்றிகளையும் அழிக்கவும், தொற்று இல்லை என சான்றளிக்கப்பட்ட பண்ணைகளில் உள்ள கால்நடைகள் அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களில் மட்டுமே இறைசிக்காக கொல்லப்படவும் அனுமதிக்கப்படுகின்றன என்றார்.

ஆனால் அவற்றின் சடலம் மற்றும் பன்றி இறைச்சியை மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை.

“அது தவிர, தீபகற்ப மலேசியா முழுவதும் பன்றி பண்ணைகள் மற்றும் பன்றி தயாரிப்புகளை மாற்றுவதற்கான நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன, மேலும் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பன்றி பண்ணைகள் மற்றும் பன்றி பண்ணைகளின் கண்காணிப்பு, மருத்துவ ஆய்வு மற்றும் மாதிரிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன,” என்று அவர் ஒரு அறிக்கை மூலம் இன்று தெரிவித்தார்.

மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து பன்றி இறைச்சி கூடங்களிலும் கண்காணிப்பு மற்றும் மாதிரிகள் சேகரிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

அனைத்து பன்றி வளர்ப்பாளர்களும் விலங்குகளுக்கு சமையலறையின் உணவுக் கழிவுகளை (swill feeding) கொடுக்க வேண்டாம் என்றும், பன்றியின் சடலங்களை ஆறுகள், குளங்கள், தோட்டங்கள் போன்றவற்றில் வீச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here