கோலாலம்பூர், டிசம்பர் 25 :
இன்று காலை 11 மணி நிலவரப்படி, பகாங், நெகிரி செம்பிலான் மற்றும் கோலாலம்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 539 பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
சிலாங்கூரில் உள்ள 167 பகுதிகளுக்கு நேற்றிரவு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மேலும் 236 பகுதிகள் இன்னும் மின்சார விநியோகத்திற்காக காத்திருக்கின்றன. அவற்றில் சிலாங்கூரில் 127 பகுதிகளும், பகாங்கில் 105 பகுதிகளும், நெகிரி செம்பிலான் மற்றும் கோலாலம்பூரில் தலா இரண்டு பகுதிகளும் அடங்கும்.
“வெள்ளநீர் வடிந்தாலும் உங்கள் பகுதியில் இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை என்றால், உங்கள் வளாகத்திற்கு மின்சாரம் வழங்கும் மின் துணை நிலையம் மீண்டும் செயல்படுவதற்கு முற்றிலும் பாதுகாப்பாக இல்லை என்று அர்த்தம்” என்று பெர்னாமா இன்று தனது முகநூலில் வெளியிட்ட தெனகா நேஷனல் பெர்ஹாட்டிற்கான (TNB) பதிவில் தெரிவித்துள்ளது.
இதுவரை மீளவும் மின்சாரம் வழங்கப்படாத பகுதிகளில் நுகர்வோரின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் உள்ளூர் நிலைமைகளைப் பொறுத்து கட்டம் கட்டடமாகவிநியோகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று அப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.