கோலாலம்பூர், டிசம்பர் 26 :
இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகாங், நெகிரி செம்பிலான் மற்றும் கோலாலம்பூரில் உள்ள மொத்தம் 623 பகுதிகளில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று TNB Careline இன் முகப்பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் தெரிவித்துள்ளது.
பகாங்கின் 480 பகுதிகள், நெகிரி செம்பிலானின் 25 பகுதிகள் மற்றும் கோலாலம்பூரின் 118 பகுதிகள் ஆகிய அடங்கும்.
இதற்கிடையில் இன்று நண்பகல் வரை, சிலாங்கூரில் 171 பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
“இருப்பினும், உங்கள் பகுதியில் வெள்ளம் வடிந்தாலும், மின்சாரம் இன்னும் வரவில்லை என்றால், உங்கள் வளாகத்திற்கு மின்சாரம் வழங்கும் மின் துணை நிலையம் செயல்படுவதற்கு இன்னும் முற்றிலும் பாதுகாப்பாக இல்லை” என்று அபதிவில் அது கூறியது.
சிலாங்கூரில் 80 பகுதிகளும், பகாங்கில் 37 பகுதிகளும், நெகிரி செம்பிலான் மற்றும் கோலாலம்பூரில் தலா இரண்டு பகுதிகளும் நுகர்வோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை என்றும் TNB Careline தெரிவித்துள்ளது.








