மலாக்கா சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேருக்கு கோவிட் தொற்று

மலாக்காவில் திங்கள்கிழமை (டிசம்பர் 27) கூடிய 15ஆவது  மாநில சட்டமன்றத்தின் முதல் (சிறப்பு) அமர்வில் கலந்து கொள்ளாத நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிட் -19 தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

இதை உறுதிப்படுத்திய முதலமைச்சர் டத்தோஸ்ரீ சுலைமான் எம்.டி அலி, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன்  சோதனை செய்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பின்னர் மேலும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் அவையில் கலந்து கொள்ளவில்லை என்றார்.

கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட சில சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதால், முன் அறிவிப்பின்படி அமர்வு நடத்தப்படவில்லை என்று அவர் இங்கே சட்டசபை மண்டபத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார். திட்டமிடப்பட்ட நான்கு நாள் கூட்டம் ஒரு நாளாக குறைக்கப்பட்டது,.மாநில பட்ஜெட் 2022 தாக்கல் செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

Datuk Rahmad Mariman (Ayer Molek), Mohd Noor Helmy Abdul Halem (Duyong), Siti Faizah Abdul Azis (Sungai Rambai), Rosli Abdullah (Kuala Linggi), Adly Zahari (Bukit Katil), Ngwe Hee Sem (Machap Jaya) and Datuk Muhammad Jailani Khamis (Rembia) ஆகிய 7 பேரும் சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாதாவர்கள் ஆவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here