கிளந்தான், திரெங்கானு, பகாங் ஆகிய மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை- மலேசிய வானிலை ஆய்வு மையம்

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 30:

நாளை வரை கிளந்தான், திரெங்கானு, பகாங் ஆகிய மூன்று மாநிலங்களில் தொடர்ச்சியான கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் மெட்மலேசியா வெளியிட்ட ஒரு அறிக்கையில், கிளந்தானின் ஜெலி, திரெங்கானுவின் கெமாமன் மற்றும் குவாந்தான், பகாங் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தது.

மூன்று மாநிலங்களில் உள்ள மற்ற மாவட்டங்கள் ஜனவரி 1ம் தேதி வரை ஆரஞ்சு நிறத்தில் (கடுமையான தொடர் மழை எச்சரிக்கை) இருப்பதாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

நாளொன்றுக்கு 240 மி.மீ.க்கு மேல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அல்லது அபாய நிலை வானிலை எச்சரிக்கை விடப்படுகிறது.

மேலும் ஆரஞ்சு நிலை அல்லது கடுமையான வானிலை எச்சரிக்கையானது, கிளந்தனில் உள்ள தனா மேரா, மச்சாங், கோலக்கிராய் மற்றும் குவா மூசாங்; திரெங்கானுவின் டுங்குன், பெசுட்,மற்றும் உலு தெரெங்கானு ; பஹாங்கில் ஜெரான்துட், மாரான் மற்றும் பெக்கான் ஆகிய இடங்களில் தொடர்ந்து கனமழையால் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சள் எச்சரிக்கை நிலை வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்ட கெடா மற்றும் பெர்லிஸின் சில இடங்களில் தொடர்ந்து கனமழை ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here