கோத்தா பாரு, டிசம்பர் 30 :
இன்று மாலை 4.30 மணி நிலவரப்படி, மொத்தம் 836 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி, கிளந்தானில் உள்ள 10 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் ஜெலி மற்றும் கோலக்கிராய் ஆகிய இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் 233 குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர்.
பேரிடர் தகவல் சமூக நலத்துறையின் தர்காவின் அடிப்படையில், ஜெலியில் ஏழு தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன மற்றும் கோலக்கிராயில் 3 தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கிளந்தானில் உள்ள பல ஆறுகளில் நீர் மட்டம் அபாய நிலையை எட்டியுள்ளன. கம்போங் ஜெனோப், தானா மேராவிலுள்ள சுங்கை கோலோக், 23.23 மீட்டர் (மீ) எச்சரிக்கை அளவை விட அதிகரித்துள்ளது.
மேலும் இரண்டு ஆறுகள் எச்சரிக்கை மட்டத்தில் உள்ளன, அதாவது ஜெலியில் உள்ள சுங்கை ஏர் லானாஸ் (29 மீ) மற்றும் கோலாக்ராயில் உள்ள சுங்கை கிளந்தான் (20.28 மீ) என்பனவாகும்.
மலேசிய வானிலை மையம் கிளந்தானின் ஜெலி மற்றும் கோலக்கிராய் ஆகிய இடங்களுக்கு நாளை வரை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.





















