உணவுப் பொட்டலங்களில் ஆணி மற்றும் ஸ்டேபிளர் கிளிப் போன்ற பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம்; மீறினால் ஈராண்டுகள் சிறை மற்றும் 10,000 வெள்ளி அபராதம்!

புத்ராஜெயா, ஜனவரி 4 :

உணவுப் பொட்டலங்களில் ஆணி மற்றும் ஸ்டேபிளர் கிளிப் போன்ற பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று உணவு வணிகர்கள் நினைவூட்டப்படுகிறார்கள், ஏனெனில் அது உணவில் சேர்க்கப்பட்டாலோ அல்லது நுகர்வோர் விழுங்கினாலும் கடுமையான காயத்தை ஏற்படுத்தும் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர், டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

உணவைப் பொதி செய்ய ஆணிகளை பயன்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சகம் (MOH) கவனத்தில் எடுத்துக் கொண்டது. சமீபகாலமாக சமூக ஊடகங்கள், இதுபோன்ற பாதுகாப்பற்ற உணவுப் பொதியிடல் முறைகளின் ஆபத்துகள் குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் கவலையளிக்கின்றன.

இந்தச் செயலுக்கு அபராதம், சிறைத்தண்டனை போன்ற சட்ட நடவடிக்கைகள் விதிக்கப்படலாம் என்றார்.

விதி 37 (2), உணவு ஒழுங்குமுறைகள் 1985 இன் கீழ் உள்ள ஏற்பாடு, ஒரு நபர் எந்தவொரு நச்சு, ஆபத்தான அல்லது அழிவு ஏற்படுத்தும் பொருளை சேமித்து வைக்கவோ, எடுத்துச் செல்லவோ, விநியோகிக்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என்று கூறுகிறது.

வாடிக்கையாளர்கள் அல்லது நுகர்வோருக்கு தீங்கு விளைவிக்கும்ஆணிகள் போன்ற பொருட்கள் உட்பட உணவு பொதியிடல் எந்தவிதமான மாசுபாடும் இல்லாமல் இருப்பதை உணவு கையாளுபவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று 2009ஆம் ஆண்டின் உணவு சுகாதார விதிமுறையின் 36-வது பிரிவு கூறுகிறது.

“உணவுப் பொதிகளில் ஆணிகள், ஸ்டேபிள்ஸ் அல்லது அதுபோன்ற ஆபத்தான பொருட்களைப் பயன்படுத்தும் உணவு வியாபாரிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் மற்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், RM10,000 க்கு மிகாமல் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றார்.

“உணவில் ஆபத்தான பொருள் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான தண்டனையும் விதிக்கப்படலாம். பிரிவு 13, உணவுச் சட்டம் 1983 இன் கீழ், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருளைக் கொண்டிருக்கும் எந்தவொரு உணவையும் தயாரித்து அல்லது விற்கும் எவரும் ஒரு குற்றத்திற்கு குற்றவாளி மற்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், RM100,000க்கு மிகாமல் அல்லது பத்து ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும்,” என்று அவர் முன்பு கூறினார்.

டாக்டர் நூர் ஹிஷாம் மேலும் கூறுகையில், உணவு வழங்குநர்கள் மற்றும் வணிகர்கள் பயன்படுத்துவதற்கு பல்வேறு பாதுகாப்பான உணவுப் பொருட்களை பொதியிடல் செய்யும் முறைகள் இருப்பதை நினைவூட்டினர்.

மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பொதியிடப்பட்ட உணவுகளை வாங்கி கொடுப்பதற்கு முன்னர் அனைத்தையும் பரிசோதிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

“இவ்வாரான பொதியிடல் மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான பிற பிரச்சினைகள் தொடர்பில் பயனர்கள் அருகில் உள்ள மாநில சுகாதாரத் துறை அல்லது மாவட்ட சுகாதார அலுவலகம் அல்லது http://moh.spab.gov.my அல்லது facebook உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப் பிரிவு www.facebook.com/bkkmhq என்ற இணையதளம் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம் , “என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here