3 வயது மகளை கேபிளால் அடித்து துன்புறுத்திய தந்தைக்கு மூன்றாண்டுகள் சிறை

கோத்தா பாரு, ஜனவரி 4 :

தனது எட்டு வயது மகளை கேபிளால் அடித்து துன்புறுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட 44 வயது தந்தைக்கு, மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு, தந்தை துன்புறுத்தியதன் விளைவாக  அந்தக் குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு டிச., 29ல் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு, இன்று நீதிபதி அகமட் பாசில் பஹ்ருடின் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

டிசம்பர் 28 ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் பாசீர் புத்தேவின் கம்போங் சுங்கை கெலோங்கில் உள்ள அவரது வீட்டில் தனது சொந்த மகளை, கேபிளால் அடித்து துஷ்பிரயோகம் செய்ததாக அந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a) இன் கீழ் குற்றச்சாட்டானது, 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது RM20,000க்கு மிகாமல் அபராதம் அல்லது இரண்டும் விதிக்க இந்த சட்டம் வழி செய்கிறது.

வழக்கின் உண்மைகளின் அடிப்படையில், சம்பவத்தன்று, குற்றம் சாட்டப்பட்டவர் தனது கைப்பேசியின் தொழில்நுட்ப பிரச்சனையால் கோபமடைந்து தனது இளைய குழந்தையை அடித்தார்.

பாதிக்கப்பட்ட குழந்தையும் அவளது உடன்பிறந்தவர்களும் குற்றவாளியான தந்தை தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டை விட்டு வெளியேறி, இங்குள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் சகோதரியிடம் உதவி கேட்டனர்.

பாதிக்கப்பட்டவரின் காயங்களைக் கண்டதும், சகோதரி காவல்துறையில் புகார் அளித்தார் அதன் அடிப்படையில், தந்தை கடந்த ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி அதிகாலை 5.20 மணிக்கு வீட்டில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகாத நிலையில், துணை அரசு வழக்கறிஞர் அபு அர்சல்னா ஜைனல் அபிடீன் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here