பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 10 :
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அசாம் பாக்கியை பதவி விலகக் கோரி, புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகம் முன், பிகேஆர் கட்சியின் இளைஞர்கள் குழு, இன்று அமைதிப் போராட்டத்தை நடத்தியது.
போராட்டத்தில் பங்கேற்ற பிகேஆர் இளைஞர் பிரிவு தலைவர் அக்மல் நசீர் இது பற்றி கூறியபோது, அசாம் பாக்கி தனது வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியதாக அறியமுடிகிறது.
இந்த விஷயம் குறித்து ஜோகூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதமரின் நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை என்று நசீர் கூறியதுடன் , இந்த போராட்டம் தொடர்பில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது என்றார்.
இரண்டு நிறுவனங்களிடமிருந்து பங்குகளை வாங்குவதற்கு தனது வர்த்தகக் கணக்கைப் பயன்படுத்த, தனது சகோதரர் அனுமதித்ததாக அசாம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
பங்குகளை வாங்க அவரது சகோதரர் நசீர் தனது கணக்கைப் பயன்படுத்த அனுமதித்ததாக அசாம் ஒப்புக்கொண்ட அறிக்கையைப் பெற்றதை கூட்டரசு காவல்துறையும் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.