ஏப்ரல் முதல் மின்னியல் முறை ஓட்டுநர் சோதனையை அறிமுகப்படுத்துகிறது சாலைப் போக்குவரத்துத் துறை

புத்ராஜெயா, ஜனவரி 17 :

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் ஓட்டுநர் உரிமம் பெறுபவர்களுக்கான சோதனை, மின்னியல் முறை சோதனை மூலம் (The e-testing system) பரிசோதிக்கப்படும் என்று சாலைப் போக்குவரத்துத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ஜைலானி ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

இந்த மின்னியல் முறை ஓட்டுநர் சோதனை, சாலைப் போக்குவரத்துத் துறையின் 76வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இ-டெஸ்டிங் முறை செயல்படுத்தப்படும்போது சோதனையாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும், ஏனெனில் தற்போது பணியிலுள்ள 7 சோதனையாளர்களுடன் ஒப்பிடும்போது, இந்த மின்னியல் முறை சோதனைக்கு 2 சோதனையாளர்கள் மட்டுமே தேவைப்படுவார்கள் என்றார்.

“தற்போதைய சோதனையின் முடிவுகள் கிடைப்பதற்கு இரண்டு வாரங்கள் தேவைப்படுகிறது. ஆனால் இந்த மின்னியல் முறை ஓட்டுநர் சோதனை மூலம் சோதனைகளின் முடிவுகள் உடனடியாக அறியப்படும்” என்று அவர் இன்று இங்கு கூறினார்.

மேலும் மின்னியல் முறை ஓட்டுநர் சோதனையில் வகுப்புக் கற்றல், சுற்று மற்றும் சாலை அமர்வுகள் என்பனவும் உள்ளன, ஆனால் சர்க்யூட் அமர்வின் போது அதிகாரியும் வேட்பாளரும் காரில் ஒன்றாக உட்கார மாட்டார்கள், மாறாக அதிகாரி கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஓட்டுநர் உரிமம் பெறுபவரின் செயல்பாடுகளை கண்காணிப்பார் என்றார்.

மலேசிய மோட்டார் வாகன உரிமங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கு சாலைப் போக்குவரத்துத் துறை முயற்சித்து வருவதாகவும் ஜைலானி கூறினார்.

தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த முறை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here