பிள்ளைகள் கண்முன்னே கணவரை குத்தி கொன்ற மனைவி – சிரம்பானில் சம்பவம்

சிரம்பானில் இரண்டு பிள்ளைகளின் கண்முன்னே  55 வயதான முன்னாள் கணக்காளர் ஒருவரை அவரது மனைவி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் Rasah Kemayan Golf and Country Township, Seremban 2 இல் உள்ள ஒரு பங்களாவில்  இன்று நடந்துள்ளது.

ஒரு தனியார் நிறுவனத்தின் முன்னாள் கணக்காளரான போ செங் ஹியாப், உடலில் இரண்டு கத்திக் குத்து காயங்களுக்கு உள்ளான நிலையில், அவரது பங்களாவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாதிக்கப்பட்டவரின் மனைவியும் 55 வயதுடையவர்.  போலீஸ் குழு வீட்டிற்கு வந்தவுடன்  அவர் கைது செய்யப்பட்டார்.

சிரம்பான் காவல்துறைத் தலைவர் ஏசிபி நந்தா மாரோஃப் கூறுகையில், ஒரு குழு வீட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு மாலை 4.10 மணியளவில் தம்பதியரின் நான்கு குழந்தைகளில் ஒருவரிடமிருந்து காவல்துறைக்கு ஒரு  அழைப்பு வந்தது. இந்த கொலை பங்களாவில் நடந்ததாகவும், அந்தத் தம்பதியின் கடைசி இரண்டு பிள்ளைகள் நேரில் பார்த்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவரின் காயங்களை புலனாய்வாளர்கள் பரிசோதித்ததாகவும், அவரது மார்பு மற்றும் இடுப்பின் இடதுபுறத்தில் குத்தப்பட்ட காயங்களைக் கண்டறிந்ததாகவும் நந்தா கூறினார். சம்பவ இடத்தில் இருந்து கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதத்தையும் போலீசார் கைப்பற்றியதாக அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் மனைவியை விசாரணைகளுக்காக மேலும் காவலில் வைப்பதற்கான உத்தரவு திங்களன்று காவல்துறையினரால் கோரப்படும் என்று நந்தா கூறினார். மரணத்திற்கான காரணத்தை அறிய போவின் உடல் பிரேத பரிசோதனையும் நடத்தப்படும் என்றார். புலனாய்வாளர்கள் தடயங்களை சேகரித்து கொலைக்கான காரணத்தை வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here