மாணவர் கிளர்ச்சி; 120 பேர் பலி- ஊரடங்கு அமல்படுத்தியது வங்காளதேசம்

டாக்கா:

ங்காளதேசத்தில் அரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு, 120 பேர் பலியானதை அடுத்து, நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுளதுடன், வீதிகளில் இராணுவம் ரோந்து வருகிறது.

கடந்த 1971ல் பாகிஸ்தான் ராணுவத்துடன் போரிட்டு வென்று, வங்காளதேசம் தனி நாடானது. போரில் உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.Bangladesh Army enforces curfew as student-led protests spiral - The Hinduகடந்த 2018ல் நடந்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, இட ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டது. அதை மீண்டும் அமல்படுத்தப் போவதாக அரசு அறிவித்ததை அடுத்து, மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.

எதிர்க்கட்சிகள் துாண்டி விடுவதாக ஆளும் அவாமி லீக் கட்சி கூறியது. அக்கட்சியின் தொண்டர்கள், போராடும் மாணவர்களை தாக்கினர். பல இடங்களில் மோதல் நடந்து, கலவரமாக மாறி தீ வைப்பு சம்பவங்கள் பரவின. அரசு தொலைக்காட்சி நிலையம் எரிக்கப்பட்டது.Bangladesh Riots Continue, 3 People Died Related To Student Demonstration Protests Work Quotaநர்சிங்டி மாவட்டத்தில் சிறையை முற்றுகையிட்ட மாணவர்கள், கதவுகளை உடைத்து 800 கைதிகளை விடுவித்தனர். சிறைக்கு தீ வைக்கப்பட்டது. முக்கிய வங்கிகள், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் இணையதளங்கள் போராட்டக்காரர்களால் முடக்கப்பட்டன.

மூன்று நாட்களாக நடந்து வரும் வன்முறையில், இதுவரை 120 பேர் பலியானதாக தெரிகிறது; 1,000 பேருக்கு மேல் காயம் அடைந்துள்ளனர். அதில் பாதி பேர் போலீஸ்காரர்கள்.

தற்போது அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, கலவரம் செய்வோரை கண்டதும் சுட அரசு உத்தரவிட்டது.National curfew imposed in Bangladesh after student protesters storm prison | Bangladesh | The Guardian

அதையும் மீறி, டாக்காவின் ராம்புரா பகுதியில் நேற்று போராட்டம் நடந்தது. போலீசார் சுட்டதில் சிலர் காயம் அடைந்தனர். பள்ளி, கல்லுாரிகள், பல்கலைகள் மூடப்பட்டுள்ளன.

அங்கு தொலைபேசி, இணையசேவை ஆகியன துண்டிக்கப்பட்டுள்ளது. சேனல்களின் ஒளிபரப்பும் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொந்தளிப்பால், வங்காளதேசத்தில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். விமான, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் சாலை மார்க்கமாக சொந்த நாடு திரும்புகின்றனர்.

நேபாளம், பூட்டான் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியா வழியாக தாயகம் செல்கின்றனர். இந்திய மாணவர்களில் 364 பேர் மேகாலயா எல்லை வழியாக நேற்று முன்தினம் திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here