சமூக ஊடகங்களின் கூடுதல் பாதுகாப்புக்கு அங்கீகார உறுதியை வழங்கும் இரண்டு அம்சங்களை செயல்படுத்துவீர்- MCMC

புத்ராஜெயா, பிப்ரவரி 10 :

சமூக ஊடக கணக்குகள், உடனடி செய்தியிடல் தளங்கள் மற்றும் பயனீட்டாளர்கள் கடவுச்சொல்லைப் பாதுகாக்க, இரண்டு வழிகளில் அங்கீகாரத்தை (two-factor authentication-2FA) ஒரு பாதுகாப்பு அம்சமாக செயல்படுத்துமாறு மலேசிய தொடர்பாடல் மற்றும் பல்லூடக கமிஷன் (MCMC) பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

2FA மூலம், கணக்கை அணுக பயனீட்டாளர்கள் உள்நுழைவு குறியீடு அல்லது சிறப்பு பாதுகாப்பு எண்ணை உள்ளிடுமாறு கேட்கப்படுவார்கள், மேலும் அறியப்படாத உலாவி அல்லது சாதனத்திலிருந்து உள்நுழைவு முயற்சி மேற்கொள்ளப்படும்போது, மேலதிக எச்சரிக்கையைப் பெறுவார்கள், மேலும் ஒவ்வொரு முறையும் உள்நுழைவு முயற்சியை உறுதிப்படுத்தும்படி கேட்கப்படுவார்கள்.

இதன்மூலம் சமூக ஊடக பயனீட்டாளர்கள் தங்களது கணக்கினை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

சாதாரணமாக கடவுச்சொற்கள் மட்டுமே பாவிப்பது பலவீனமான பாதுகாப்பு முறையாகும். இவ்வாறான கணக்குகள் மூன்றாம் தரப்பினரால் ஹேக்கிங் மற்றும் கையகப்படுத்தும் அபாயத்திற்கு ஆளாகின்றன என்று MCMC ஓர் அறிக்கையின் மூலம் கூறியுள்ளது.

ஆணையத்தின் கூற்றுப்படி, ஹேக்கிங் மற்றும் அணுகல் கட்டுப்பாட்டை இழந்தது தொடர்பான புகார்கள் 2020 இல் 1,599 புகார்களும், ​​கடந்த ஆண்டு 2,483 புகார்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. இது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 55 சதவீதம் அதிகரித்துள்ளது.

மின்னஞ்சல்கள் மூலம் பெறப்படும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், சமூக ஊடக கணக்கு மற்றும் செய்தியிடல் பயன்பாட்டு பாதுகாப்புக் குறியீடுகளைப் பகிருமாறு கேட்கும் நபர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் MCMC பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.

“சிறப்பு குறியீடுகளின் இத்தகைய பகிர்வு பயனீட்டாளர்கள் சமூக ஊடக கணக்குகள் அல்லது செய்தியிடல் பயன்பாடுகளை கட்டுப்படுத்த பொறுப்பற்ற தரப்பினருக்கு எளிதான வாய்ப்பை மட்டுமே வழங்கும்” என்று MCMC வலியுறுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here