நேற்று சமூக வலைத்தளங்களில் மனித சடலம் என பகிரப்பட்ட புகைப்படம் பெண் வடிவ மெழுகு பொம்மை !

ஷா ஆலாம், பிப்ரவரி 10 :

நேற்று நண்பகல், செக்‌ஷன் 27ல் உள்ள மோட்டார் சைக்கிள் கடைக்கு பின்னால், மனித உடல் போன்ற தோற்றம் கொண்ட பொட்டலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அது ஒரு பெண்ணின் சடலம் என ஊகித்து சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்டது.

ஷா ஆலாம் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் பஹருடின் மத் தாயிப் இது பற்றிக் கூறுகையில், பிற்பகல் 3 மணியளவில் KDEB கழிவு மேலாண்மை சென்டிரியான் பெர்ஹாட் ஊழியர்களால் இந்த பொட்டலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தின் (IPK) தடயவியல் பிரிவு நடத்திய ஆய்வின் முடிவுகளின்படி, அந்த பொட்டலம், போர்வை மற்றும் பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட பெண் வடிவ மெழுகு பொம்மை மட்டுமே இருந்ததாகவும், அது மனித சடலம் இல்லை என்றும் அவர் கூறினார்.

“இந்த வழக்கில் கிரிமினல் குற்றம் எதுவும் இல்லை என்பதால், இந்த வழக்கு தொடர்பில் எந்த குற்றமும் இல்லை (NOD) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “படத்தை ஊகிக்க வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது” என்றார்.

இது தொடர்பாக, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பல புகைப்படங்கள் அந்த பிளாஸ்டிக் பொட்டலத்தில் மனித சடலம் இருப்பது போன்ற கருத்தில் வெளியிடப்பட்டிருந்தன.

அந்த பிளாஸ்டிக் பொட்டலம், வரிசையாக இருந்த கடைகளின் பின் சந்தில் குப்பைகளுடன் கொட்டப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here