உணவருந்தி கொண்டிருந்த ஆடவரை வெட்டி தப்பியோடிய கும்பல் – பொந்தியானில் சம்பவம்

உணவகத்தில்  உணவருந்தி கொண்டிருந்தபோது ஒரு குழுவால் ஆடவர் ஒருவர் வெட்டப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளானார்.   இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியது. இது உணவகத்தில் ஒரு நபர் மற்ற நபர்களால் வெட்டப்பட்ட சம்பவத்தைக் காட்டுகிறது.

பொந்தியான் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமது ஷோபி தாயிப் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக தனது துறைக்கு மாலை 3.12 மணியளவில் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பு வந்தது. சாட்சிகளின் கூற்றுப்படி, இரண்டு பேர் குற்றத்தைச் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.  40 வயதான பாதிக்கப்பட்டவர் பலத்த காயங்களுக்கு ஆளாகியதால்  சிகிச்சைக்காக பொந்தியான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்று அவர் கூறினார்.

உணவகத்தில் இருந்த மூடிய சர்க்யூட் கேமரா காட்சிகள் (ரகசிய கண்காணிப்பு கேமிரா) இந்த சம்பவத்தைக் காட்டியதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும், சந்தேக நபர் பயணித்த வாகனம் போலியான பதிவு எண்ணைப் பயன்படுத்தியதாக நம்பப்படுவது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவத்தை பார்த்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது 013-7145506 என்ற எண்ணிலோ தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். குற்றவியல் சட்டம் பிரிவு 326இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here