ஊழியர் சேம நிதியின் (EPF) கடந்தாண்டு லாப ஈவு 5.2% முதல் 6% வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஊழியர் சேமநிதி வாரியம் (EPF) 2021 ஆம் ஆண்டிற்கான லாபு ஈவு  5.2% முதல் 6.0% வரை இருக்கும் எனவும் அதன் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதியத்தின் அதிக மொத்த முதலீடுகள் மற்றும் சிறந்த மூலதன சந்தை செயல்திறன் ஆகியவற்றின் பின்னணியில் இது வழங்கப்பட்டு வருகிறது.

Bank Islam Malaysia Bhd இன் தலைமைப் பொருளாதார நிபுணர் முகமட் அஃப்ஸானிசம் அப்துல் ரஷித் கூறுகையில், 2020 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்கான EPF இன் மொத்த முதலீடுகள், 2020 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் RM48.02 பில்லியனாக 7.7% அதிகமாக உள்ளது.

அந்த வகையில், 2020 ஆம் ஆண்டை விட லாப ஈவு சிறப்பாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. இது 2020 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 5.4%  அளவிலாவது வழங்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here