ஜோகூர் சட்டமன்றத் தேர்தல்: பாரிசான் வேட்பாளர் பட்டியல் சனிக்கிழமை அறிவிப்பு

ஜோகூர் பாரு:

ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பாரிசான் நேஷனல் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் இவ்வார இறுதிக்குள் உறுதி செய்யப்படும்.

அதற்கான அறிவிப்பு வரும் சனிக்கிழமை வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக மாநில பாரிசான் தொடர்புக்குழு தலைவர் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி தெரிவித்தார்.

ஜோகூர் மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்கும் பாரிசான் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் ஒருங்கிணைப்பு பணிகள் தற்போது 80 விழுக்காடு வரை நிறைவு பெற்றுள்ளது.

ஆனாலும் கூட்டணியின் தலைமைத்துவ ஒப்புதலுக்கு காத்திருக்கும் வரையில் இறுதி முடிவானது மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது.

இது தொடர்பிலான அதிகாரப்பூர்வ நியமன கடிதம் வெளியிடப்படும் வரை எந்தவொரு முடிவும் உறுதியானது என்று எடுத்துக் கொள்ள முடியாது.
அதிலும் (பாரிசான்) வேட்பாளர் தேர்வு மாநில தலைமைத்துவம் மட்டுமே எடுக்கும் முடிவு அல்ல.

அதற்கு பாரிசான் – அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி, கூட்டணி கட்சி தலைவர்களின் ஒப்புதல்கள் தேவைப்படுகின்றன.

முன்னதாக கூட ஒருவருக்கு வேட்பாளர் நியமன கடிதம் கிடைத்த பின் அந்த ஆவனம் திரும்பி பெறப்பட்டது என்று ஜோகூர் மந்திரி பெசாருமான அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here