சுகாதார அமைச்சகம் நேற்று 26,701 கோவிட்-19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. மேலும், 1,469 பேர் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
26,701 புதிய தொற்றுகள், 118 அல்லது 0.44% மட்டுமே, நோயறிதலின் போது 3, 4 அல்லது 5 வகைகளில் இருந்தன என்று சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 3,138,215 ஆக உள்ளது. ஒரு டுவிட்டில் அவர் 11,744 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்த மீட்பு எண்ணிக்கை 2,888,194 ஆக உள்ளது. நேற்றைய தினம் 19 கிளஸ்டர்கள் (கொத்துகள்) பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.


















