ரஷ்யா – உக்ரைன் மோதலுக்கான தொடக்கம் என்ன?

ரஷ்யா, உக்ரைன் இடையே போர் மூண்டுள்ள நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னைகளை தெரிந்துகொண்ட நீண்ட கால வரலாற்றை புரிந்துகொள்ளவேண்டியுள்ளது.

2022 பிப்ரவரி 24ஆம் தேதி அதிகாலை. உக்ரைனின் வானை கிழித்துக் கொண்டு தலைநகர் கீவ்-ஐ நோக்கி ரஷ்யாவின் ராணுவ விமானங்கள் சீறிப்பாய்ந்தன. அதுவரை உக்ரைனின் எல்லைகளில் படைகளை குவித்துகொண்டிருந்த ரஷ்யா, போருக்கான காரணம் பற்றி இப்படி கூறியது: ”ரஷ்யாவின் பாதுகாப்பும், வளர்ச்சியும் புதிய உக்ரைனால் அச்சுறுத்தலுக்கு உள்ளாயிருப்பதால் இந்த நடவடிக்கை’ என்று தெரிவித்திருந்தது.

இந்த அறிவிப்பு தொலைக்காட்சிகளில் வெளியான சற்று நேரத்திலேயே உக்ரைனின் மேற்கு, கிழக்குப் பகுதிகள் மற்றும் நட்பு நாடான பெலாரஸ் வழியாக ரஷ்யப் படைகள் மும்முனை தாக்குதலை தொடங்கின. தாக்குதலை எதிர்பார்த்திருந்த உக்ரைனும் பதிலடி கொடுக்க தொடங்கியது. அதுவரை ஆதரவுக் குரல் தந்து கொண்டேயிருந்த நேட்டோ நாடுகள் ஏனோ படைகளை மட்டும் அனுப்பத் தயங்கின. உக்ரைன், தாங்கள் கைவிடப்பட்டதை உணர்ந்தது.

ரஷ்யாவுக்கு எதிராக தனித்து விடப்பட்டுள்ளோம். எங்களுடன் நின்று போரிட யாருமில்லை. எங்களுக்கு நேட்டோ பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய யாரும் முன்வரவில்லை என்றார் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி. மேலும், “போராட துணிவுள்ள மக்கள் ஆயுதம் ஏந்தி, தாய் மண்ணின் உரிமைக்காக ராணுவத்துடன் நில்லுங்கள் என்றார். இப்போதுவரை தலைநகரை ரஷ்ய படைகள் கைப்பற்றவிடாமல் உக்ரைன் போராடி வருகிறது.

தொடர்ந்து நீடித்து வரும் வரும் போரில் அடுத்த 24 மணி நேரம் மிக முக்கியமானது. போரின் முதல் இரண்டு நாட்கள் எந்த பெரிய நாடுகளின் ஆதரவுமின்றி உக்ரைன் தீரத்துடன் போரிட்டது. ரஷ்யா வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பரப்பப்படும் வதந்திகளுக்கும் அதிபர் ஜெலன்ஸ்கியே சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு பதிலளித்து வந்தார்.

மேலும் அண்டை நாடுகளின் ஆதரவையும் கோரினார். விளைவு? ரஷ்யாவின் மீது பொருளதார தடைகள் விதிக்கப்பட்டன. உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பும் பணியை தொடங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருப்பது வரலாற்றில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதை ரஷ்யா கண்டித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here