SOPகளை மீறியதற்காக PH கூட்ட அமைப்பாளர்களுக்கு 3,000 வெள்ளி அபராதம்

ஜோகூர் பாருவில் அமானா தலைவர் முகமட் சாபு கலந்துகொண்ட பக்காத்தான் ஹராப்பான் (PH)  அமைப்பாளர்களுக்கு, கோவிட்-19 SOPகளை மீறியதற்காக ஜோகூர் பாரு மாவட்ட சுகாதார அலுவலகம் அபராதம் விதித்தது.

பேச்சாளர்களின் சொற்பொழிவின் போது முகக்கவசம் அணியத் தவறியது. MySejahtera வழியாக செக்-இன் செய்ய மக்களுக்கு இடம் வழங்காதது மற்றும் சமூக ரீதியான இடைவெளி இல்லாதது ஆகிய மூன்று சம்மன்கள் என மொத்தம் RM3,000 என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு அபராதமும்  1,000 வெள்ளியாகும். ஆனால் மேல்முறையீடு செய்யலாம் என்று அமைப்பாளர்களின் பிரதிநிதி ஒருவர் செய்தியாளர்களிடம் இன்று இரவு சந்தித்தபோது கூறினார்.

ஸ்கூடாய், தாமான் முத்தியாரா  ரினியில் உள்ள கோத்தா இஸ்கந்தர் இருக்கைக்கான PH இன் பிரதான செயல்பாட்டு அறையில் கூட்டம் நடைபெற்றது. செராமாவில் பேசிய மற்றவர்கள் ஜோகூர் டிஏபி தலைவர் லீவ் சின் டோங், மூடா பொதுச் செயலாளர் அமிரா ஐஸ்யா அப்த் அஜீஸ் மற்றும் கோத்தா இஸ்கந்தருக்கான PH இன் வேட்பாளர் Dzulkefly Ahmad.

Dzulkefly ஒரு எச்சரிக்கையை மட்டும் வெளியிடுமாறு சுகாதார அதிகாரிகளிடம் கேட்க முயன்றார். ஆனால் தோல்வியடைந்தார். இதற்கிடையில் ஒரு சுகாதார அதிகாரி கூறுகையில், அமைப்பாளர்களுக்கு அமைக்கப்பட்ட SOP களுக்கு இணங்குமாறு அவர்கள் குறிப்பாகக் கூறியுள்ளனர்.

முன்னதாக தேசிய முன்னணி மற்றும் மூடாவைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்களும் SOP களுக்கு இணங்கத் தவறியதற்காக சுகாதார அதிகாரிகளால் அபராதம் விதித்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here