கோலாலம்பூர், மார்ச் 13 :
தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 750 சம்மன்களை போலீசார் வழங்கினர்.
கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை (JSPT) சுற்றுச்சூழல் துறை (DOE) மற்றும் கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) ஆகியவற்றுடன் இணைந்து, கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று அதிகாலை வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஜாலான் ராஜா லாவூட், ஜாலான் துன் ரசாக், ஜாலான் கூச்சிங், டூத்தா -உலு கிள்ளான் நெடுஞ்சாலை (DUKE) டியூக் மற்றும் லிங்கரான் தெங்கா 2 நெடுஞ்சாலை (MRR2) போன்ற பல இடங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக JSPT கோலாலம்பூரின் துணை தலைவர் சரிபுடின் முகமட் சாலே கூறினார்.
இந்த நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக சம்மன் விதிக்கப்பட்டது மற்றும் வாகன கட்டமைப்பை (ekzos) மாற்றியமைத்த குற்றத்திற்காக சாலை போக்குவரத்து சட்டம் (ஏபிஜே) 1987 பிரிவு 64 இன் கீழ் 38 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 45 (A) APJ 1987 இன் படி 29 முதல் 62 வயதுடைய 13 ஆண்களையும் போலீசார் கைது செய்தனர்.
சட்டவிரோதமாக பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதும், ஓட்டுநர்களிடம் இருந்து பலவந்தமாக பணம் பறிமுதல் செய்வதும் கண்டறியப்பட்டதுடன், 21 முதல் 49 வயதுக்குட்பட்ட இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு,பிரிவு 50 (3) ஏபிஜே 1987ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டது,” என்று அவர் கூறினார். இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட அனைவரும் கோலாலம்பூர் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சரிபுடின் கூறினார்.





















