காணாமல் போன இரண்டு மீனவர்கள் ரெடாங் தீவில் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

கோல திரெங்கானு, மார்ச் 18:

கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது 24 மணி நேரத்திற்கும் மேலாக காணாமல் போனதாகக் கூறப்படும் செத்தியூ, மெராங் பகுதியைச் சேர்ந்த இருவர் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் பூலாவ் ரெடாங்கில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டனர்.

29 மற்றும் 31 வயதுடைய மீனவர்கள் சென்ற ஃபைபர் படகு, நீர் கசிந்து மூழ்கியதை அடுத்து பூலாவ் ரெடாங்கில் தஞ்சம் அடைந்தனர்.

மலேசிய கடல்சார் அமலாக்க முகமைத்துவ இயக்குநர் திரெங்கானு, கடல்சார் கேப்டன் முஹமட் சுஃபி முகமட் ரம்லி கூறுகையில், இரு மீனவர்கள் காணாமல் போனதாக அம்மீனவர் ஒருவரின் தாயான 58 வயது பெண் ஒருவர் போலீஸ் புகார் அளித்துள்ளார்.

“ தகவல் கிடைத்ததும், இன்று காலை 9 மணியளவில் பாதிக்கப்பட்டவரை தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது என்றும் இரண்டு மீனவர்களை கண்டுபிடிப்பதற்காக பெர்காசா 1234 படகு சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டது.

“நண்பகல் 12 மணியளவில், பாதிக்கப்பட்டவர்கள் பூலாவ் ரெடாங்கைச் சுற்றியிருந்த பகுதியில் பாதுகாப்பாக இருந்தனர், மேலும் அவர்கள் சென்ற படகில் கசிவு ஏற்பட்டதால் அவர்கள் அங்கு தஞ்சம் அடைந்ததாக நம்பப்படுகிறது,” என்று அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here