தலைநகரில் ஐந்து திடீர் வெள்ள எச்சரிக்கை கருவிகள் (sirens) பொருத்தப்படும் – டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 22 :

திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, நகரவாசிகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கும் முயற்சியாக, தலைநகரைச் சுற்றி ஐந்து எச்சரிக்கை சைரன்கள் பொருத்தப்படும் என்று கூட்டுறவு பிரதேசங்களின் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் தெரிவித்தார்.

லோரோங் கிரி கெராமாட் 15, சான் சோவ் லின் சுரங்கப்பாதை, தாமான் யூ-தாண்ட், கம்போங் செராஸ் பாருவில் உள்ள ஜாலான் செம்பிலான் மற்றும் சுங்கை காயூ ஆரா ஆகிய இடங்களில் இந்த எச்சரிக்கை சைரன்கள் நிறுவப்படும், அதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன என்றார்.

இது வெள்ள அனர்த்த முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதில் கோலாலம்பூர் மாநகர சபை (DBKL) முன்னெடுத்து வரும் நடவடிக்கையில் இந்த எச்சரிக்கை கருவிகளை நிறுவுவதும் ஒன்றாகும், அத்தோடு வெள்ளம் அதிகம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதலாக 51 CCTV கேமராக்களும் நிறுவப்படும் என்றும் அவர் கூறினார்.

இதுவரை 13 சிசிடிவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை இன்னும் நிறுவும் பணியில் இருப்பதாகவும் அவர் விளக்கினார்.

திடீர் வெள்ளத்தைக் கையாள்வதில் தலைநகரில் உள்ள Smart Tunnel செயல்திறன் குறித்து டத்தோ சே அப்துல்லா மாட் நவி (பாஸ்-தும்பாட்) கேட்ட கேள்விக்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here