கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டோரில் 243 பேர் நேற்று மருத்துவமனைகளில் அனுமதி

கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டோரில்  நேற்று 243 பேர் புதிதாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 124 தொற்றுகள் வகை 1 மற்றும் 2 ஆகவும், 119 தொற்றுகள் வகை 3, 4 மற்றும் 5 ஆகவும் உள்ளன.

சிலாங்கூர் 59 புதிய சேர்க்கைகளுடன் அதிக எண்ணிக்கையில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஜோகூர் (37) மற்றும் பேராக் (31) உள்ளன. நேற்று 225 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

ஒரு அறிக்கையில், சுகாதார தலைமை  இயக்குநர் ஜ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கோவிட்-19 தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICUs) அவற்றின் மொத்த கொள்ளளவான 760 படுக்கைகளில் 13% என்று கூறினார். மொத்தம் 63 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்பட்டது. அவர்களின் அதிகபட்ச திறனில் 8% வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பொது மருத்துவமனைகளில் கோவிட்-19 மற்றும் கோவிட்-19 அல்லாத நோயாளிகளின் மொத்தத் திறனைப் பொறுத்தவரை, ஆபத்தான படுக்கைகள் 61% திறனில் இருந்தன. அதே நேரத்தில் 52% ஐசியூக்கள் பயன்பாட்டில் உள்ளன.

நேற்று நான்கு புதிய கிளஸ்டர்கள் (கொத்துகள்) பதிவாகியுள்ளன. கோவிட்-19 தொற்று விகிதம் (R0) 0.84 ஆக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here