இன்னும் தலைமறைவாக இருக்கும் 80 ரோஹிங்கியா கைதிகள் தேடப்பட்டு வருகின்றனர்

கடந்த புதன்கிழமை, பண்டார் பாருவுக்கு அருகிலுள்ள சுங்கை பாக்காப் குடியேற்ற தடுப்புக் கிடங்கில் இருந்து தப்பிச் சென்ற மீதமுள்ள 80 ரோஹிங்கியா கைதிகளை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

நேற்றிரவு நிலவரப்படி 65 ஆண்கள், எட்டு பெண்கள் மற்றும் 7 சிறுமிகள் தலைமறைவாக உள்ளதாக கெடா காவல்துறைத் தலைவர் வான் ஹசான் வான் அஹ்மத் தெரிவித்தார்.

இதுவரை, 229 ஆண்கள், 89 பெண்கள், 69 சிறுவர்கள் மற்றும் 61 சிறுமிகள் என மொத்தம் 448 ரோஹிங்கியா கைதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தற்போது, 15 பேர் டிப்போவில் இருப்பதாகவும், அவர்களை வேறு தடுப்புக் கிடங்குகளுக்கு மாற்றுவதற்கான ஆவணப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் வான் ஹாசன் கூறினார்.

கடந்த புதன்கிழமை, 528 ரோஹிங்கியா கைதிகள் டிப்போவில் இருந்து தப்பிச் சென்றனர். எவ்வாறாயினும், அவர்களில் ஆறு பேர் தப்பிச் செல்லும் முயற்சியில் நெடுஞ்சாலையைக் கடக்கும்போது கார் மோதி இறந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here