கொழும்பில் இருந்து சென்னை சென்ற பயணிகள் விமானத்தில் பதற்ற நிலை !

சென்னை, மே 20 :

இன்று அதிகாலை கொழும்பில் இருந்து சென்னை சென்ற பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்கிய போது, விமானிகள் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

153 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானம் இன்று அதிகாலை சென்னையில் தரையிறங்கியது. இதன்போது விமானி இருக்கும் பகுதி நோக்கி லேசர் ஒளி பாய்ச்சப்பட்டுள்ளது.

நேராக விமானியின் கண்களுக்கு அடிக்கும் விதமாக இந்த ஒளி பாய்ச்சப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த லேசர் ஒளி அதிக ஆற்றலுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இரண்டு விமானிகளையும் நோக்கி இந்த ஒளி அடிக்கப்பட்திருப்பினும் அவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. எனினும் விமானிகள் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினர்.

இது தொடர்பில் உடனடியாக போலீஸ் செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், விமான நிலையத்தில் இருந்து 2 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பழவந்தாங்கல் பகுதியிலிருந்து இந்த லேசர் ஒளி வந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்றும் இதுபோன்ற சம்பவம் ஐந்து வருடங்களுக்கு முன்னரும் இடம்பெற்ற நிலையில், இருவர் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here