கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் -வானிலை ஆய்வு மையம்

கோலாலம்பூர் மே 25 :

கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே மழை காரணமாக சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயா ஆகியவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நண்பகல் 1 மணி வரை மோசமான வானிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இன்று முன்னதாக வெளியிடப்பட்ட எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு மலாக்கா மாநிலமும், நெகிரி செம்பிலானில் உள்ள பல பகுதிகளும் இந்த வானிலையை அனுபவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அது தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here