சபா: வெள்ளம், நிலச்சரிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசாங்கம் நிதியுதவி!

கோலாலம்பூர்:

சபா மாநிலத்தில், கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி முதல், தொடர்ந்து பெய்து வரும் மழையால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆறு மாவட்டங்களில் உள்ள, 220 குடும்பங்களைச் சேர்ந்த, 863 பேர், இடம்பெயர்ந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு, உதவுவதற்காக, சபா அரசாங்கம், தற்காலிகத் தங்குமிடங்களுக்கு, மாற்றப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும், RM1,000 ரிங்கிட் உதவி தொகையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, RM10,000 ரிங்கிட் வழங்குவதாக, அறிவித்துள்ளது.

மாநிலப் பேரிடர் மேலாண்மை குழு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 11 நிவாரண மையங்கள், தற்போது, செயல்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்க, உணவுப் பொருட்கள், விநியோகிக்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூர், நேற்று பெனாம்பாங், பாபார், இனானாம், புத்தாத்தான் உள்ளிட்ட, பல பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்குச், சென்று பார்வையிட்டார். இந்த இடங்களில், நான்கு முக்கிய நிலச்சரிவுகள், ஏற்பட்டு, 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற, பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சேதமடைந்த சாலைகள், பொதுப் பணித் துறையால் சீர்செய்யப்பட்டு வருகின்றன. அனைத்துப் பேரிடர் மேலாண்மை குழுமமும், தங்கள் முழுத் திறனில், செயல்பட்டு, பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும், நிவாரணப் பணிகளை, ஒருங்கிணைப்பதற்கும், தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனத்துடன் (NADMA), இணைந்து, நடமாடும் பாலங்கள், நிதியுதவி, பிற வளங்களை, வழங்குவதற்கு, சபா அரசாங்கம், நடவடிக்கை எடுத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here