கிளாந்தான் ஆற்றில் காணாமல் போன மூன்றாவது நபரை தேடும்பணி இன்னும் தொடர்கிறது

கோலக்கிராய், மே 28 :

கம்போங் பாசீர் கேலாங் அருகே உள்ள கிளாந்தான் ஆற்றில், நேற்று காணாமல் போன மூன்றாவது நபரை தேடும் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கை 100 மீட்டர் தூரத்திற்கு நீட்டிக்கப்பட்டது.

இன்று காலை 7 மணிக்கு, மீண்டும் தொடங்கப்பட்ட தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் கிராம மக்களை தவிர, ரோயல் மலேசியன் போலீஸ் (PDRM), மலேசியன் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) மற்றும் மலேசியக் குடிமைத் தற்காப்புத் துறையைச் சேர்ந்த 43 உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக கோலக்கிராய் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர், துணை கண்காணிப்பாளர் கமாருல்ஜமான் ஹருன் தெரிவித்தார்.

ஆற்றின் அமைதியான நிலை தேடுதலை எளிதாக்கியதாகவும், பாதிக்கப்பட்டவர் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பெங்கலான் ஃபெரி கேலாங் லாமாவிலிருந்து 500 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஆற்றில் மீன்பிடித்த பின்னர் அவர்கள் மூவரும் ஆற்றில் குளித்தபோது, ​​வலுவான நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டதாகவும் அதில் முதலில் பலியான 15 வயதான சிறுமியின் உடல் நேற்று மாலை 6.30 மணிக்கும், இரண்டாவது 13 வயது சிறுவனின் உடல் இரவு 9 மணிக்கும் கண்டுபிடிக்கப்பட்டது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

15 வயதான மூன்றாவது சிறுமி இன்னமும் தேடப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here