மலேசியாவில் ஓமிக்ரான் வைரஸின் துணை வகைகள் என நம்பப்படும் இரு புதிய வைரஸ்கள் கண்டறியபட்டன

கோலாலம்பூர், ஜூன் 9:

ஓமிக்ரோன் வைரஸின் துணை வகை என நம்பப்படும் பிஏ.5 மற்றும் ஒரு பிஏ.2.12.1 ஆகிய இரு வழக்குகளை மலேசியா இன்று கண்டறிந்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் பதிவிட்ட ஒரு டுவீட்டில், “நாட்டில் இந்த மாறுபட்ட வைரஸ் வகை கண்டறியப்படுவது இதுவே முதல் முறை என்று கூறினார்.

“இவ் இரண்டு வைரஸ்களையும் @WHO (உலக சுகாதார அமைப்பு) Omicron மாறுபாட்டின் கீழ் VOC-LUM என வகைப்படுத்தியுள்ளது.

மேலும், BA.5 மற்றும் BA.2.12.1 ஆகியவை அதிக பரிமாற்ற வீதத்தைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் நேற்று 1,518 புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகள் மற்றும் 6 இறப்புகள் பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here