டுரியான் தோட்ட உரிமையாளர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கூலிம், ஜூன் 21 :

நேற்று, இங்குள்ள சுங்கை கோப் காரங்கானின் கம்போங் கோங்சி தாலத்தில் உள்ள, அவருக்குச் சொந்தமான டுரியான் பழத்தோட்டத்தில், டுரியான் தோட்ட உரிமையாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது.

கூலிம் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் ரெட்சுவான் சாலே கூறுகையில், காலை 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்டவரின் தோட்டத்திற்கு அருகில், இரப்பர் மரம் (பால்) தட்டுபவராக வேலைசெய்யும் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையை தொடர்பு கொண்டதாக கூறினார்.

56 வயதுடைய நபர் ஒருவர் மயங்கிக் கிடப்பதையும் அவரது வலது கை இரத்த வெள்ளத்தில் கிடந்ததையும் இரப்பர் மரம் (பால்) தட்டுபவர் கண்டார், எனினும் “காலை 7 மணிக்கு இரப்பர் மரம் (பால்) தட்டுபவர், பாதிக்கப்பட்டவரை சந்தித்து பேசியதாக அவர் தெரிவித்தார் என அவர் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் படுத்திருந்த இடத்தில் இருந்து 700 மீட்டர் தொலைவில் உள்ள குடிசைக்கு அருகில், பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிளையும் போலீசார் கண்டுபிடித்ததாக ரெட்சுவான் கூறினார்.

குடிசையில் நடத்தப்பட்ட சோதனையில், பாதிக்கப்பட்டவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்த ஆயுதம் தற்செயலாக வெடித்ததாக நம்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

பிரேதப் பரிசோதனையில், துப்பாக்கிச் சூட்டில் இருந்து ரத்தம் கசிந்ததால் மரணம் ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது, மேலும் இந்தச் சம்பவத்தில் எந்தக் குற்றவியல் கூறும் இல்லை என்று அவர் கூறினார், இந்த வழக்கு திடீர் மரணம் என்று வகைப்படுத்தபட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here