சாலை விபத்தில் தம்பதியர் பலி

தம்பினில் இன்று (ஜூன் 30) ​​ஜாலான் ஜெலாய்-புக்கிட் ரோத்தான் வழியாகச் சென்ற கார் மோதியதில் தம்பதியர் உயிரிழந்தனர். இந்த விபத்தின் தாக்கத்தால் 68 வயது ஓட்டுநரும் அவரது 62 வயது மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக Tampin OCPD Supt Anuwal Ab Wahab தெரிவித்தார்.

மற்றொரு காரை ஓட்டிச் சென்ற 50 வயதுடைய பெண்மணிக்கு கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக கோலா பிலா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று அவர் கூறினார், விபத்து மதியம் 12.45 மணியளவில் நடந்தது.

சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here