ஜாலான் தாமான் செலாயாங் சாலையில் அடாவடித்தனமாக காரை ஒட்டிய ஆடவருக்கு RM4,000 அபராதம்

கோம்பாக், ஜூலை 8 :

ஜாலான் தாமான் செலாயாங் ஜெயா, செலாயாங்கில் சாலையில் குண்டர் போல் நடித்து ஆபத்தான முறையிலும் ஆக்ரோஷமாகவும் வாகனம் ஓட்டியதாகக் கூறப்படும் நபர், இன்று செலாயாங் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

31 வயதான அந்த நபர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டதாகவும், சம்பவத்தின் போது சந்தேக நபர் பயன்படுத்திய இரும்பு கம்பி மற்றும் காரையும் போலீசார் கைப்பற்றியதாகவும் கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ஜைனல் முகமட் முகமட் தெரிவித்தார்.

“சந்தேக நபர் சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 42 (1) மற்றும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 506 இன் கீழ் அவரின் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

“சந்தேக நபர் தனக்கு எதிரான மிரட்டல் குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் , நீதிமன்றம் அவருக்கு RM4,000 அபராதம் விதித்தது, அதே நேரத்தில் ஆபத்தான வாகனம் ஓட்டிய வழக்கில், சந்தேக நபர் தான் குற்றமற்றவர் என்று குறி விசாரணை கோரினர், இந்த வழக்கில் நீதிமன்றம் RM3,000 ஜாமீன் நிர்ணயித்தது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கை மீண்டும் செப்டம்பர் 20-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது என்றார்.

சமூக ஊடகங்களில் பரவிய1 நிமிடம் 14 வினாடிகள் நீடித்த வீடியோ பதிவில், குண்டர் போல நடித்து, வீடியோ காட்சியை பதிவு செய்தவருக்கு சொந்தமான வாகனத்தின் முன், திடீரென பலமுறை கட் செய்து பிரேக் போட்டு, பெரோடுவா மைவி காரை அடாவடித்தனமாக சாலையில் ஓட்டிச் சென்றதைக் காணமுடிந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here