இலங்கை முன்னாள் பிரதமர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இலங்கை நீதிமன்றம் தடை விதிப்பு

கொழும்பு, ஜூலை 15 –

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோர் எதிர்வரும் ஜூலை 28 ஆம் தேதி வரை, அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இலங்கை உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 15) தடை விதித்துள்ளது என்று ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா என்ற ஊழல் எதிர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இரண்டு முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்கள் உட்பட மற்றய மூன்று முன்னாள் அதிகாரிகளும் ஜூலை 28 வரை நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாட்டிற்கு வெளியே செல்ல முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அக்குழு தனது டூவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள ஒரு டூவிட்டில் தெரிவித்துள்ளது.

-(ராய்ட்டர்ஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here