உலகிலேயே மிக அழகான கையெழுத்திற்கு சொந்தக்காரி நேபாள நாட்டின் பிரகிருதி மல்லா

நேபாளத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணின் கையெழுத்து உலகிலேய மிக நேர்த்தியான அழகான கையெழுத்து என்று புகழை பெற்றுள்ளது.

தொடர் பயிற்சியால் நேபாள மாணவி இந்த நிலையை எட்டி உள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த 16 வயதாகும், பிரகிருதி மல்லா என்ற மாணவியின் கையெழுத்து தான் உலகின் அழகான கையெழுத்து என்ற புகழை பெற்றுள்ளது

சிறுமி பிரகிருதி மல்லா, தனது 14 வயதில் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, அவரது கையெழுத்தில் உருவான கடிதத்தை பார்த்து பலரும் வியந்து போனார்கள். அப்போதே அந்த கையெழுத்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. அந்த நோட்டில் இருந்த கையெழுத்தின் அழகைக் கண்டு நேபாள மக்கள் வியந்து பாராட்டி, பாராட்டு மழை பொழிந்தார்கள்.

இந்நிலையில் நேபாள மாணவி பிரகிருதி மல்லா, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 51வது ஆண்டு ஒற்றுமை தினத்தை ( UAE 51 Spirit of the Union) முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வாழ்த்துக் கடிதம் எழுதினார். விழாவின் போது அவர் தனிப்பட்ட முறையில் கடிதத்தை தூதரகத்திற்கு வழங்கினார்.

இந்நிலையில் நேபாளத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் வெளியிட்ட ட்வீட்டில் உள்ள கடிதம் மிகப்பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அந்த ட்வீட் பெரிய அளவில் வைரல் ஆகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here