திரெங்கானு மத்திய அரசுக்கு RM472.7 மில்லியன் கடனை திரும்பிச் செலுத்தியுள்ளது- மந்திரி பெசார்

கோலா தெரங்கானு, ஜூலை 25 –

ஜனவரி 2019 முதல் கடந்த ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் திரெங்கானு மாநில அரசாங்கம் RM472.78 மில்லியன் கடன்களை மத்திய அரசுக்கு திருப்பி செலுத்தியுள்ளது என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சம்சூரி மொக்தார் கூறினார்.

‘2019 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட பணம், எண்ணெய் ராயல்டி கட்டணத்தில் (WTP) 25 சதவிகிதம் குறைப்பதன் மூலம் RM425.70 மில்லியனைச் செலுத்தியது, அதைத் தொடர்ந்து WTP இல் ஐந்து சதவிகிதக் குறைப்பு மூலம் 2020 இல் RM31.86 மில்லியனை செலுத்தியது, 2021 ஆம் ஆண்டில், மாநில அரசாங்கம் RM15.20 மில்லியன் பணத்தை திருப்பி செலுத்தியது’ என்று, அவர் இன்று மாநில சட்டமன்ற கூட்டத்தில் ஹில்மி ஹருனின் (PAS-Manir) வாய்மொழி கேள்விக்கு பதிலளித்தார்.

அவரைப் பொறுத்தவரை, ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி, மாநில அரசு மத்திய அரசுக்கு இன்னும் செலுத்த வேண்டிய கடனில் மீதம் RM267.09 மில்லியன் நிலுவையிலுள்ளது என்றார்.

“அந்தத் தொகையில், நீர் வழங்கல் திட்டத்திற்கு (RM226.7 மில்லியன்), அதைத் தொடர்ந்து குறைந்த விலை பொது வீடுகள் (RM37.16 மில்லியன்) மற்றும் திரெங்கானு மாநிலப் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (PMINT) வளர்ச்சித் திட்டங்கள், மொத்தம் RM3.2-மாக உள்ளது என்றார்.

மாநிலத்தின் கடன் சுமை குறித்து ஹில்மியின் துணைக் கேள்விக்கு பதிலளிக்கும்போது, நிதி நிலை காரணமாக புதிய திட்டங்களை உருவாக்குவது மாநில அரசுக்கு சவாலாக உள்ளது என்றார்.

“எவ்வாறாயினும், எங்களுடைய செலவினங்களில் முன்னுரிமைகளை நிர்ணயிப்பதன் மூலம் மக்களுக்கு சேவைகளை வழங்க முடியும் மற்றும் விவேகத்துடன் செலவழிக்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here