மூன்று பினாங்கு உணவு விற்பனை நிலையங்களில் எலி எச்சம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, மூடுமாறு உத்தரவிடப்பட்டது

பாலிக் பூலாவ், ஜூலை 28 :

மூன்று பினாங்கு உணவு விற்பனை நிலையங்களில் எலியின் கழிவுகள் இருப்பது உட்பட நிர்ணயிக்கப்பட்ட சுகாதாரத் தரங்களை பூர்த்தி செய்யவில்லை என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அவற்றை மூடுமாறு பினாங்கு நகர சபை (MBPP) உத்தரவிட்டுள்ளது.

பினாங்கு நகர சபை மேயர் டத்தோ Yew Tung Seang கூறுகையில், தனது அமலாக்கக் குழு செவ்வாய்கிழமை (ஜூலை 26) ஒரு திடீர் நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், மூன்று உணவு வளாகங்கள் அடிப்படை சுகாதாரத்தை புறக்கணித்ததைக் கண்டறிந்ததாகவும் கூறினார்.

அமலாக்கக் குழுவின் ஆய்வில், இரண்டு கடைகளில் எலிக்கழிவுகள் இருந்ததாகவும், ஒன்றில் 50% மதிப்பெண்களுக்குக் குறைவாகவும் இருந்ததால், மூன்று வளாகங்களையும் 14 நாட்களுக்கு உடனடியாக மூட உத்தரவிடப்பட்டது என்றார்.

மேலும் உரிமம் இல்லாமல் உணவு வளாகத்தை இயக்குதல், வளாகத்தில் தெரியும் இடத்தில் உரிமத்தைக் காட்டாதது உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பான எட்டு அபாரதங்களையும் அவரது குழு இந்த நடவடிக்கையில் வழங்கியதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here