கூச்சிங், ஆகஸ்ட் 6 :
சரவாக் மலேசிய குடும்ப அபிலாசைகள் (AKM) கண்காட்சியின் முதல் நாளான நேற்று, மழையையும் பொருட்படுத்தாமல் 19,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.
ஆகஸ்ட் 5 முதல் 7 வரை இங்குள்ள டத்தரான் பேராயான் பெட்ரா ஜெயாவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இது நல்ல வரவேற்பைக் காட்டியதாக மூத்த பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் கூறினார்.
“வார இறுதி நாளான இன்று மழை பெய்யாததால் அதிகமான பார்வையாளர்கள் வருவார்கள் என நம்புகிறோம்.
சரவாக் மலேசிய குடும்ப அபிலாசைகள் சுற்றுப்பயண கண்காட்சியை பார்வையிட்ட பிறகு, “சரவாக்கியர்கள், குறிப்பாக கூச்சிங்கைச் சுற்றி வசிப்பவர்கள் இங்கு வரலாம், ஏனெனில் அரசாங்க திட்டங்கள் மற்றும் உதவிகள், பொருட்கள் விற்பனை உட்பட இங்கு நிறைய விஷயங்கள் உள்ளன என்றார் .
மேலும் 8.8 கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தில் அரசின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் சுகி அலி மற்றும் சரவாக் மாநிலச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமட் அபுபக்கர் மர்சுகி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மூன்று நாள் சரவாக் AKM சுற்றுப்பயணத்தின் போது, பல்வேறு உதவிகள் மற்றும் சேவைகளை வழங்கும் 28 பொது சேவை நிறுவனங்களின் ஈடுபாட்டுடன் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.