பகலில் கட்டுமானத் தொழிலாளர்கள், இரவில் கொள்ளைக்காரர்கள் – 5 இந்தோனேசியர்கள் கைது

புத்ராஜெயா, ஆகஸ்ட் 14 :

கடந்த வியாழன் அன்று, இங்குள்ள 11ஆவது பகுதியில் ஆயுதம் ஏந்தி இரண்டு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், ரந்தாவ் கும்பல் என்று அழைக்கப்படும் கும்பலின் உறுப்பினர்களான ஐந்து இந்தோனேசிய ஒப்பந்தத் தொழிலாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பகலில் கட்டுமானத் தொழிலாளர்களாக வேலை செய்துவரும் இவர்கள், நள்ளிரவில் திருட்டு மற்றும் கொள்ளைகளில் ஈடுபடுகிறார் என்று புத்ராஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர், A அஸ்மாடி அப்துல் அஜிஸ் தெரிவித்த்தார்.

முதலாவது வழக்கு, ஜாலான் P11- B இல் உள்ள ஒரு வீட்டில் அதிகாலை 3.55 மணியளவில் நடந்ததாக புகார் வந்தது.

வீட்டு உரிமையாளரான 42 வயது பெண்ணும் அவரது மூன்று குழந்தைகளும் வீட்டின் மேல் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர், அப்போது முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் வீட்டிற்குள் புகுந்து, பாதிக்கப்பட்ட பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி, அவரது கையை வயரால் கட்டிவிட்டு, அவரிடமிருந்த RM200 கொண்ட பணப்பையை ஒப்படைக்க உத்தரவிட்டனர்.

“இரண்டு முகமூடி அணிந்த ஆண் சந்தேக நபர்களும் பாதிக்கப்பட்டவரின் வீட்டைக் கொள்ளையடித்து, அங்கிருந்து இரண்டு மோதிரங்கள், ஒரு வளையல் மற்றும் ஒரு காதணி ஆகியவற்றைக் கொண்டு சென்றதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“விசாரணையின் முடிவில் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் திருட்டுக்கான அறிகுறிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், அவரது வீட்டில் இருந்த நான்கு கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) வேலை செய்யவில்லை என்றும் கண்டறியப்பட்டது,” என்று அவர் கூறினார்.

அஸ்மாடி தொடர்ந்து கூறுகையில், இரண்டாவது சம்பவம் ஒரு நாள் கழித்து இங்குள்ள ஜாலான் B 1 இல் உள்ள 66 வயது முதியவரின் வீட்டில் நடந்தது.

அவரது கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவருக்கு நகைகள் மற்றும் RM6,500 ரொக்கம் உட்பட RM20,000 இழப்பு ஏற்பட்டது.

முகமூடிகளை அணிவதும் பாதிக்கப்பட்டவர்களை கேபிள்களால் கட்டி வைப்பதும் குழுவின் செயல் முறைகளில் ஒன்று என்றார்.

இந்த புகார்களின் அடிப்படையில், 39 முதல் 44 வயதுடைய அனைத்து சந்தேக நபர்களும் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றி வசித்து வருகிறார்கள் என்றும், சந்தேக நபர்கள் இங்குள்ள தாமான் சவுஜானா ஹிஜாவ் வளாகம் 11-ன் சாலையோரத்தில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர் என்றும் கூறினார்.

“பாதிக்கப்பட்ட அனைவரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கூறினர், அத்தோடு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 29 வயதுடைய ஒருவருக்கு கடந்தகால போதைப்பொருள் பதிவுகள் உள்ளது,” என்று அவர் கூறினார்.

இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here