தேசியக் கொடியை பறக்க விடாததற்காக அபராதம் விதிக்கும் செயல்முறையை மறுக்கிறார் ஈப்போ மேயர்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 25 :

சுதந்திர மாதமான இம்மாதத்தில் தேசியக் கொடியை பறக்கத் தவறிய வளாகங்களுக்கு அபராதம் வழங்கியதாகக் கூறப்படும் செய்திகளை ஈப்போ நகர சபை ((MBI) மறுத்துள்ளது.

இது தொடபில் மேயர் ருமைசி பஹாரின் கூறுகையில், மெர்டேக்கா தினத்தை கொண்டாடும் வகையில் தேசியக் கொடியை பறக்க விடுவதற்கு மட்டுமே அவரது அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

தேசியக் கொடியை பறக்க விடுதில் தங்கள் பங்கை வளாக உரிமையாளர்கள் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும், கோலாலம்பூர் மாநகர சபையும் (DBKL) தேசியக் கொடியை பறக்க விடாத வணிக வளாகங்களுக்கு அபராதம் விதிக்க மாட்டோம் என்று கூறியது.

இன்றுவரை, குவாந்தான் நகர சபை (MBK) மட்டுமே தேசியக் கொடியை காட்சிப்படுத்தாததற்காக வணிக வளாகங்களுக்கு அபராதங்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here