பிரதமரின் சிறப்பு அதிகாரி லோக்மான் ஆதாமுக்கு எதிராக போலீசில் புகார்

புத்ராஜெயா: டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மீது அவதூறு கருத்து தெரிவித்ததாக அம்னோ உச்ச மன்ற முன்னாள் உறுப்பினர் டத்தோ லோக்மான் நூர் ஆதாம் மீது பிரதமரின் சிறப்பு அதிகாரி  போலீசில் நேற்று புகார் அளித்தார்.

டாக்டர் கமருல் ஜமான் யூசுஃப், மதியம் 12.30 மணியளவில் செக்‌ஷன் 7இல் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கமருல் ஜமான், இஸ்மாயில் சப்ரிக்கும், பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினுக்கும் இடையேயான ‘ஒப்பந்தம்’ குறித்து லோக்மான் நூர் ஆதாம், முகநூல் நேரடி ஒளிபரப்பு மூலம் பிரதமரை அவதூறாகப் பேசியதாகக் கூறினார்.

இந்த வழக்கு Sepang மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டது மற்றும் Sepang மாவட்ட காவல்துறை தலைவர் ACP Wan Kamarul Azran Wan Yusof ஐ தொடர்பு கொண்ட போது, ​​புகாரினை பெறுவதை உறுதி செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here