டுரியான் பண்ணை நீர்த்தேக்கங்கள் மூடப்படும் – சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சர்

அலோர் ஸ்டார், செப்டம்பர் 6 :

இரண்டு மாதங்களுக்கு முன், குபாங் துணை மாவட்டத்தில் 43 கிராமங்களை வெள்ளம் சூறையாடியதுடன் , ஜூலை 4 அன்று கம்போங் இபோயில் மூன்று காவுகொண்டதன் பின்னர், வெள்ளத்தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கூனுங் இனாஸில் உள்ள மூசாங் கிங் பண்ணையின் மூன்று பெரிய நீர்த்தேக்கங்கள் மூடப்படும் என்று சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்தார்.

இந்த மூன்று நீர்த்தேக்கங்களையும் விரைவில் மூடுவதற்கு நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறைக்கு (DID) உத்தரவிடப்பட்டுள்ளது.

“கூனுங் இனாஸ் மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களை நாங்கள் வெள்ளத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் அதற்கான பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதை தமது துறை தீர்மானிக்கும்,” என்று, ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த கெடா- பாஸ் கட்சியின் 68 வது பாஸ் முக்தாமரில் கலந்து கொண்டபோது பாஸ் துணைத் தலைவராகவும் இருக்கும் துவான் இப்ராஹிம் இவ்வாறு கூறினார்.

ஜூலையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தினால், மூசாங் கிங் டுரியான் பண்ணையில் உள்ள பல சிறிய நீர்த்தேக்கங்களில் ஒன்று மழையின் போது நிரம்பி உடைத்துக்கொண்டு பெருக்கெடுத்து ஓடியதாகவும், மேலும் வெள்ளத்தால் பிடுங்கப்பட்ட மரக்கட்டைகள், குப்பைகள் மற்றும் அடர்ந்த சேறு ஆகியவற்றுடன்
வலுவான அலைகள் குபாங் துணை மாவட்டத்தில் 40 கிராமங்களையும், பாலிங் மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களையும் சூறையாடின.

1,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் சேதமடைந்துள்ளன, குறைந்தது 17 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் கம்போங் இபோயில் அவர்களின் வீடு அடித்துச் செல்லப்பட்டதில் கர்ப்பிணிப் பெண் உட்பட ஒரு குடும்பத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவுகூரத்தக்கது.

இதனைத் தொடர்ந்து கம்போங் இபோய் மற்றும் அதை ஒட்டிய கிராமங்களில் உள்ள பாதிக்கப்பட்டவர்கள், மாநில அரசு டுரியான் பண்ணையை மூட வேண்டும் என்றும், மூன்று பெரிய நீர்த்தேக்கங்களை இடிக்கவும் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here