கெடா போலீஸ் தலைமையகத்தின் வாகனப் பணிமனையில் தீ – 15 வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்

அலோர் ஸ்டார், செப்டம்பர் 12:

கெடா காவல் படைத் தலைமையகத்தின் வாகனப் பணிமனையில், இன்று ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 கார்கள் மற்றும் ஐந்து சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகின.

இன்று காலை 4.53 மணிக்கு, தீ விபத்து குறித்து கெடா தீயணைப்பு மற்றும் மீட்பு மையத்தின் செயல்பாட்டு மையத்திற்கு அழைப்பு வந்தது என்று கெடா தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிப் பிரிவின் துணை இயக்குநர் முகமதுல் எஹ்சான் முகமட் ஜைன் தெரிவித்தார்.

அலோர் ஸ்டார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் , ஜலான் ராஜா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், ஜாலான் குண்டோர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் மற்றும் செபெராங் நியோன்யாவிலிருந்து இரண்டு தன்னார்வ தீயணைப்புப் படைகளின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழு தீயை அணைக்க இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.

“அந்த இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், பணிமனை கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதைக் கண்டறிந்தனர்.

“கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 10 கார்கள் மற்றும் 5 சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்தன” என்று அவர் இன்று இங்கு கூறினார்.

மொஹமதுல் எஹ்சான் மேலும் கூறுகையில், தீ விபத்தில் ஒரு பணிமனை கட்டடம் 80 சதவீதம் எரிந்து நாசமானது.

அதிகாலை நடந்த இந்த சம்பவத்தில் இதுவரை உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

“தீ விபத்திற்கான காரணம் மற்றும் இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here