வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடு சென்றதைத் தொடர்ந்து, பாகன் செராயில் இயங்கிவந்த நிவாரண மையம் மூடப்பட்டது

ஈப்போ, செப்டம்பர் 19 :

பாகன் செராயில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 12 பேரும் இன்று பிற்பகல் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதை அடுத்து, டேவான் கூனுங் செமாங்கோலில் உள்ள நிவாரண மையம் (பிபிஎஸ்) இன்று மூடப்பட்டது.

கெரியான் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவர், முகமட் சப்லி பக்ரி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பாகன் செராய்க்கு அருகிலுள்ள கம்போங் தெங்கா புக்கிட் செமாங்கோலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அங்கு வெள்ள நீர் வடிந்ததைத் தொடர்ந்து வீடுகளுக்குத் திரும்பிய பின்னர், இன்று நண்பகல் 1 மணிக்கு பிபிஎஸ் மூடப்பட்டதாகக் கூறினார்.

நேற்று அதிகாலை பல மணி நேரம் பெய்த கனமழையால் கம்போங் தெங்கா புக்கிட் செமாங்கோல் வெள்ளத்தில் மூழ்கியது.

அங்கு வெள்ள நீர் மட்டம் ஒரு மீட்டருக்கும் குறைவாகவே இருந்தது என்றும் அவர் கூறினார்.

மலாக்காவின், அலோர் காஜாவிலும் வெள்ளம் குறைந்துள்ளதுடன் அங்கு செயல்பட்டுவந்த இரண்டு பிபிஎஸ் இன்று நண்பகல் 2 மணிக்கு மூடப்பட்டது.

மாநில மலேசிய குடிமைத் தற்காப்புப் படை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பாலாய் ராயா புக்கிட் தம்புன் மற்றும் பலாய் ராயா புக்கிட் பாலாய் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு நிவாரண மையங்களில் , எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் இன்னமும் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here