15வது பொதுத் தேர்தலை இந்த ஆண்டு நடத்துவதற்கு பாஸ் கட்சி எதிர்ப்பு

கோலாலம்பூர், செப்டம்பர் 21:

“15வது பொதுத் தேர்தலை (GE15) இந்த ஆண்டு நடத்தக்கூடாது” என்று அரசாங்கத்தில் உள்ள உறுப்புக் கட்சிகளின் பிரதிநிதிகள் பரிந்துரைப்பார்கள் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ இட்ரிஸ் அகமட் தெரிவித்தார்.

“GE15 ஐ நடத்த வேண்டிய அவசியம் இல்லை, குறிப்பாக இனிவரும் நாட்கள் பருவநிலை காரணமாக வெள்ளம் ஏற்படும் காலம் என்றும், இதன்போது தேர்தலை நிர்வகிப்பது மிகக் கடினமாக இருக்கும் என்றும் எங்களுக்கு முன்பே தெரியும்,” என்று அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் மார்ச் 2023 வரை அதாவது பதவிக்காலம் முடியும் வரை கெடா, கிளாந்தான் மற்றும் திரெங்கானுவில் உள்ள மாநில சட்ட மன்றத்தை பாஸ் (PAS) கலைக்காது என்றும் இட்ரிஸ் கூறினார்.

நேற்று, பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், வரவிருக்கும் GE15 தொடர்பான விஷயங்கள் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here